2025 பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 15 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் அதிகமாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும்.

இந்நிலையில், காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது வாகன தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்திய வாகன சாரதிகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X