2025 மார்ச் 06, வியாழக்கிழமை

குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதிக்கு மரணதண்டனை

Freelancer   / 2025 மார்ச் 06 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 வயது குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (06) தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும், சந்தேகநபர்களான தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .