Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
1,170 ரூபாய் பெறுமதியான கோழி இறைச்சியை இலஞ்சமாக பெற்றுக்கொண்டனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரியும் மற்றுமொருவரே இவ்வாறு, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேவல்தெனிய உப- அலுவலகத்தில் பணியாற்றும் இறைவரி திணைக்கள அதிகாரி மற்றும் வீதிப்பிரிவில் பணிப்புரியும் தொழிலாளி ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கோழி இறைச்சியை இவ்விருவரும் இலஞ்சமாக பெற்றுள்ளனர் என்றும், அவ்விருவரையும் அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .