2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

களைகட்டும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி : காணொளி

Mayu   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் ஞாயிற்றுக்கிழமை (06)  நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாகச நிகழ்ச்சியை பார்க்கவரும் பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையையொட்டி 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் செய்திருக்கின்றனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 8 ஆயிரம் பொலிஸாரும் அமர்த்தப்பட்டிருந்ததோடு சாகச நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மாநகர பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .