2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Simrith   / 2025 ஜனவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெரும்போக அறுவடைக்கு தயாராகும் பொருட்டு இலங்கை இராணுவம் நாடு தழுவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 18 ஜனவரி 2025 முதல் 27 ஜனவரி 2025 வரை இயங்கும் இந்த முயற்சி, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 209 நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. துப்புரவு நடவடிக்கைகள் 18 ஜனவரி 2025 அன்று பல இடங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த முயற்சியை ஒருங்கிணைத்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, பெரும்போக அறுவடையின் போது கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X