Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 17 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் 21 ஆம் திகதி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றம் முன்னதாக அறிவித்தது.
அரசியலமைப்பின் உறுப்புரை 33(அ) பிரிவின்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 33 (ஆ) படி, ஜனாதிபதி பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கு உரிமையுடையவராவார்.
இந்த அமர்வின் போது, அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை, கொள்கை அறிக்கையின் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் பொதுமக்களுக்கும் வழங்குவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
7 hours ago