2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கல்முனையில் பச்சை மிளகாய் கசந்தது

Editorial   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் விலை 2,000 ரூபாவிற்கு செவ்வாய்க்கிழமை (19)  விற்கப்பட்டது.

சந்தையில் இந்த விலை என்றால் கிராமங்களில் உள்ள சில்லறை கடைகளில் நிலைமை வேறு. கிலோ கிராம் 2,400 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் என்று மில்லாதவாறு அதிகரித்து வருகின்றன.

பிரதான சந்தையில், திங்கட்கிழமை (17)  சில மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் விலைகள் இவை.

மிளகாய்  -2,000

பெ.வெங்காயம்-240 ரூபாய்

சி.வெங்காயம்-400 ரூபாய்

உ.கிழங்கு(வெ)-250 ரூபாய்

உ.கிழங்கு (சி)(நூரளை)-550 ரூபாய்

லீக்ஸ்-700 ரூபாய்

கரட் (நூரளை)-1,000 ரூபாய்

கரட் - 900 ரூபாய்

தக்காளி – 200 ரூபாய்

கோவா- 700 ரூபாய்

இஞ்சி -2,000 ரூபாய்

வெ.பூண்டு- 700 ரூபாய்

போஞ்சி-300 ரூபாய்

தேசிக்காய்-150 ரூபாய்

பீட்ரூட்-600 ரூபாய்

சுரைக்காய் -200 ரூபாய்

கத்தரிக்காய்- 800 ரூபாய்

வெண்டைக்காய்-600 ரூபாய்

பயற்றங்காய் - 600 ரூபாய்

பழப்புளி- 1,400 ரூபாய்

இவ்வாறு பரவலாக விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் திருப்தியாக உண்டு வாழ்வதற்கு முடியாமல் திண்டாடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X