Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 26 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக நோன்பு மற்றும் நோன்புப் பெருநாள், தமிழ், சிங்கள புதுவருடம், க.பொ.த (சா/த) பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தங்கள் உயர்தர வகுப்புக்கான கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கான கால அவகாசம் வழங்குதல் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு அவற்றின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு செயற்படத் தவறும் கல்வி நிலையத்திற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்படலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் - என்று கல்முனை மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் கடிதத்தின் பிரதிகள் கண்காணிப்பு மற்றும் உரிய நடவடிக்கைகளுக்காக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
39 minute ago
1 hours ago