2024 ஜூன் 29, சனிக்கிழமை

கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

Freelancer   / 2024 ஜூன் 26 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர்கள் நாளைய தினமும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .