2025 மார்ச் 13, வியாழக்கிழமை

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்

Freelancer   / 2025 மார்ச் 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .