2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கறுப்பு ஜூலையை சபையில் நினைவு கூர்ந்த எம்.பி

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் நினைவு கூர்ந்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே  கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் மேலும் பேசுகையில்,

இன்று (23) ஜூலைக் கலவரத்தின்  41 ஆவது ஆண்டு தினம் .1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கையின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தொடர்ந்து 3 தினங்கள் காட்டேறித்தனமான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன . அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

தற்போது தமிழர்களுக்கு இருந்த நிலங்களும் ,கலாசார அடையாளங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்பதனை இந்த சபையில் கவலையுடன் பதிவு செய்கின்றேன் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X