Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் புளூமெண்டல் ரயில் மார்க்கத்திற்கு அருகில் சென்றபோது, சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கொலை சம்மபவத்திற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்க வில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (S.R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .