2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை

கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செலவுத் தலைப்பு கலந்துரையாடல்

Freelancer   / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு அங்கமாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் நேற்று  (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் மலர்மதி கங்காதரன், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .