2025 பெப்ரவரி 12, புதன்கிழமை

கர்ப்பிணிகளே அவதானம்

Editorial   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார்.

மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராதனை மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் ஆகியவை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஆய்வொன்றை நடத்தி வருகிறன.

வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளில் 40% பேர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் பேராசிரியர் யசரத்னே குறிப்பிட்டுள்ளார். (S.R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X