Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 20, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, இனம் தெரியாத ஆயததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கருணா இன்று கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான், தன்னிடம் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago