2025 ஜனவரி 08, புதன்கிழமை

கோப் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Simrith   / 2025 ஜனவரி 07 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவிற்கு (COPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோர் புதிய COPF உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முன்னதாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X