2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்கவில் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷாஜஹான்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் என்றழைக்கப்படும், கனேமுல்ல சஞ்சீவ   கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானத்தின்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 5.46 மணியளவில் வந்தடைந்தார்.

போலிக்  கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த அவர்,  குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .