2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கனடா போக முடியாததால் உயிரை மாய்த்த இளைஞர்

Freelancer   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் கிறிஸ்டின் (வயது 30) என்ற இளைஞராவார்.

ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை அவரது சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .