2025 ஜனவரி 08, புதன்கிழமை

கந்தகாடு கைதி தப்பியோட்டம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:38 - 0     - 42

பொலன்னறுவை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் பயிற்சி நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலன்னறுவை, களுகெலே, பந்தனகல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் 94 கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது 93  இருப்பதாகவும் பயிற்சி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தப்பியோடிய கைதியை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X