Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 03 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் எனவும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட இரும்புச் சங்கிலியுடன் கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற அறையில் வரிசையாக ஆஜர்படுத்தியமைக்காக சிறைச்சாலை அதிகாரிகளை குற்றம் சுமத்திய போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
சந்தேகநபர்களை மனிதர்களைப் போன்று நடத்த வேண்டும் என வலியுறுத்திய நீதவான், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் விடுமுறை என்பதால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்றப் பெயரின் வழக்கு எண் 03 நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
விளக்கமறியலில் ஆஜர்படுத்தப்பட்ட சுமார் 40 சந்தேக நபர்கள் ஒரே சங்கிலியில் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்ற இலக்கம் 03 இன் சிறைச்சாலையில் சந்தேக நபர்களின் எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என்பதால், சந்தேக நபர்களை ஒரே இடத்தில் கைவிலங்கிட்டு நீதிமன்ற அறையில் ஆஜர்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நீதிமன்ற அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதிகளை பார்த்த நீதவான், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியதுடன், கைதிகளை மனிதர்களாக நடத்துமாறு கடுமையாக எச்சரித்தார்.
இந்த சம்பவத்திற்கு சிறை அதிகாரிகள் நீதவானிடம் மன்னிப்பு கேட்டனர்.
நீதவான் பிறப்பித்த உத்தரவின் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறையில் கைதிகளின் கட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதை காணமுடிந்தது.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .