2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கண்ணாடிப் பெட்டிகள் இனி காற்று வாங்கும்

Freelancer   / 2022 ஜூலை 10 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி மற்றும் ஆபத்தான பொருளாதார சூழ்நிலை காரணமாக, பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன எச்சரித்துள்ளார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடி, மூலப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று தெரிவித்த அவர், தற்போது 50 சதவீதமான பேக்கரிகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீதி பேக்கரிகளின் நடவடிக்கையும் மிக விரைவில் நின்றுவிடும் என்றும் குறிப்பிட்டார்.

பேக்கரித் தொழில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும், நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் பொறுப்பான உறுப்பினர் என்ற வகையில், தான் முன்னரே இது தொடர்பில் குறிப்பிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் தெரிவித்தபோதும் அமைச்சரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றார்.

பேக்கரி உற்பத்தியும் அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் பேக்கரி தொழிலை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X