Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 17 , மு.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுக்கள் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும் சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் மனைவி 37வயதுடைய பெருமாள் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
1 hours ago