2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கண்டியில் 600 தொன்களுக்கும் அதிகமான குப்பை சேகரிப்பு

Simrith   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித தந்த சின்னக் காட்சிப்படுத்தலின் போது கண்டிக்குச் சென்ற பக்தர்கள் நேற்று மதியம் 12.00 மணி வரையிலாக 600 தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை சுற்றுச்சூழலில் வீசியுள்ளனர்.

நீர்வழங்கல் திணைக்கள பொறியாளரும் திடக்கழிவுப் பிரிவின் தலைவருமான பொறியாளர் நிமல் தம்மிக்க திசாநாயக்க, நேற்று மதியம் 12 மணியளவில் ஊழியர்கள் குஹகொட குப்பைக் கிடங்கில் 500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகளைச் சேகரித்து அகற்றியதாகவும், இது நாள் இறுதிக்குள் 600 தொன்களைத் தாண்டும் என்றும் தெரிவித்தார்.

கண்டியில் தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு பக்தர்களும் சராசரியாக ஒரு கிலோ குப்பைகளை வீசியுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X