2025 ஜனவரி 27, திங்கட்கிழமை

கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் இளைஞன் கைது

Freelancer   / 2025 ஜனவரி 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் இணைய பயணச்சீட்டு மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கண்டி - ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஈ டிக்கெட்டுக்கள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். R

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X