2024 நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசி எடுத்துச் செல்ல தடை

Freelancer   / 2024 நவம்பர் 17 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு  அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.

 பரீட்சை மையத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மட்டுமே அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

 கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை காலத்தில் தேர்வு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 ஒரு கண்காணிப்பாளர் 15 நாட்களில் 20 பரீட்சை மையங்களை கண்காணிக்க வேண்டும்.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .