2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது

Editorial   / 2023 ஜூன் 26 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறான குற்றவாளிகள் நாட்டில் இருந்து தப்பியோடும் வகையில், போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மூவரில் இருவர் கடவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய போலி கடவுச்சீட்டு, விமானச் சீட்டை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றஞ்சாட்டில் மற்றுமொருவர் ஹோமகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுத்து வைத்து விசாரிக்கும் உத்தரவின் பேரில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .