Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Mayu / 2025 ஜனவரி 08 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (07) இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையர்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் 7.இலட்சத்து 50ஆயிரம் க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும்.
கடவுச்சீட்டுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு சிலர் ஐந்து முதல் ஆறு மாதங்களாகக் காத்திருக்கின்றனர். அச்சிடும் பணிகள் புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதை அடுத்து இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்கை ரீதியாகக் கடந்த அரசாங்கம் முன்னர் மேற்கொண்ட தவறான தீர்மானமே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணம். இதேவேளை வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்காரணமாக கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான பொறுப்பை புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளது.” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
46 minute ago
2 hours ago