2024 ஜூன் 29, சனிக்கிழமை

கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2024 ஜூன் 26 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை முதலாம் திகதியில் இருந்து காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

(ஈ பாஸ்போட்) இலத்திரனியல் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார். 

ஏதாவது வெளிநாட்டு பயணச்சீட்டு ஒன்று செல்லுபடியாகும் 10 வருட கால எல்லையை தாண்டிய பின்னர் அதற்கு மேலும் ஒரு வருட காலம் வழங்குவது இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகிக்கும் வரை மாத்திரமாகும் எனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படுவதுடன் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .