Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவை, நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர் பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் ரஷ்ய மற்றும் கொலம்பிய பிரஜைகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவினர் வௌ்ளிக்கிழமை (27) நீராடியுள்ளனர். அவர்கள் கடலலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உடனடியாக தலையிட்டு குழுவினரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் 12, 09 மற்றும் 04 வயதுடைய குழந்தைகளும் அடங்குவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago