Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், பாறுக் ஷிஹான்
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, மகன் மற்றும் அவரது மருமகனான சிறுவன் உட்பட 3 பேர் கடல் புதன்கிழமை (25) மாலை 5.30 மணிக்கு அலை இழுத்துச் சென்றதில் காணாமல் போயிருந்தனர்.
சங்கமன் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன் மற்றும் நந்தராஜ் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன்? சகோதரியின் மகன் ஆகிய மூவரும் நத்தார் பண்டிகையையிட்டு புதன்கிழமை (25) மாலையில் கடலில் நீராடச் சென்றிருந்தனர். முதலில் கடலில் இறங்கிய அவரது மகனும், மருமகனும், கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றத் தந்தையும் கடலில் குதித்துள்ளார். தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago