2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

கடமைகளிலிருந்து விலகத் தீர்மானம்

Freelancer   / 2025 மார்ச் 31 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வலயத்தில் உள்ள உப ரயில் நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல ரயில் நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ரயில் நிலைய அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமை மற்றும் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தால் ரயில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .