2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கடத்தப்பட்ட கார் வயலுக்குள் பாய்ந்தது

Editorial   / 2024 ஜனவரி 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார் ஒன்று, நிதி நிறுவனம் ஒன்றின் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி நிறுவனத்தின் அதிகாரிகள், எல்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்து இன்று (04) பிற்பகல் உரிமையாளரிடமிருந்து காரை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய காரை ஓட்டிச்சென்றபோது, எல்பிட்டிய, அம்பலாங்கொட பிரதான வீதியின் உரன்வல பிரதேசத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகி வயல்வெளிக்குள் சென்றுள்ளது.

விபத்தையடுத்து அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .