Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 மே 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். அதற்காக மாற்று ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன.
கடதாசியில் செய்யப்பட்ட ‘ஸ்டோ‘,‘ ‘கடதாசி மட்டை கரண்டி’, ‘கடதாசி கப்’, ‘கடதாசி பிளேட்’ இவ்வாறு பல வடிவங்களில் பொருட்கள் சந்தைகளில் புழக்கத்தில் உள்ளன. யோகட் வாங்கும் போது, பெரும்பாலான கடைகளில் மட்டை கடதாசி கரண்டியே வழங்கப்படுகின்றது.
சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தூங்கிவீசிவிட்டு, விரைவாக உக்கும் மண்ணுக்கு உரம்கொடுக்கும் இந்த கடதாசி மட்டை கரண்டியின் பயன்பாடு வரவேற்கத்தக்கது.
எனினும், அக்கடதாசி மட்டை கரண்டியில் குழி இருக்காது, வாங்குவோர்தான் இரண்டுபுறங்களும் மடித்து, குழியைப்போல செய்துக்கொள்ளவேண்டும். இந்த விடயம் தெரியாத பலரும், கடதாசி கரண்டியை மடிக்காமல், யோகட்டை அள்ளி, ஆடைகளிலும் கீழேயும் கொட்டிக்கொள்கின்றனர்.
கடைக்காரர்களும் அதனை விளங்கப்படுத்துவது இல்லை. எனினும், தமிழ் தெரியாதவர்களுக்கு அதுவும் ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இவ்விடத்தில் மடிக்கவும் என, சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு உள்ளன.
வழுவழுப்பாக இருக்கும் யோகட்டை, வழுவழுப்பான கடதாசி மட்டை கரண்டியில் அள்ளும்போது, வழுக்கி கீழே கொட்டி விடுகின்றது.
இந்த செய்தியை வாசிக்கும் போது, என்னடா, பொதுவான அறிவுக்கூட வேண்டாமா? மடித்து தின்றால் என்ன? என பலரும் கேட்கலாம். அப்படியாயின், கடதாசி மட்டை கரண்டியில் எந்தவொரு மொழியிலும் எழுதாமல், குறியீட்டை மட்டும் அச்சடித்து இருக்கலாம். ஏன்? இரண்டு மொழிகளில் மட்டும் எழுதிவிட்டு, தமிழில் எழுதாமல் விட்டனர்.
சிறுசிறு விடயங்களிலும் உரிமை இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துவதுடன்,
இலங்கையின் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படை மனித உரிமை 'மொழி உரிமை' ஆகும். எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது' என்று உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது.
சிங்களம் மற்றும் தமிழ்மொழி இலங்கையின் அரசகரும மொழிகளாகும். ஆங்கில மொழி இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago