2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

சீதுவ துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Editorial   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவை பொலிஸ் பிரிவில், கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் லியகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான நபர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது. ஜூக்கி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபரால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி அவ்விடத்தில் இருந்து  தப்பியோடியுள்ளார்.அந்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X