2024 டிசெம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

”கட்சி பேதமின்றி பலஸ்தீன உரிமைகளுக்காக நிற்போம்”

Simrith   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கட்சி, தேசியம், மதம், வர்க்கம் மற்றும் ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் நடைபெற்ற பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமைக்கான மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச வாய்ப்பேச்சைக் காட்டிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

மனிதநேய ரீதியாக, பாலஸ்தீனியர்கள் நீதியைப் பெற வேண்டும் என்றும், இதை அடைவதற்கு சர்வதேச சமூகத்துடனான தீவிர ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.

பலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவாக தனது அசைக்க முடியாத நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பலஸ்தீனத்தை தொடர்ந்து பேரழிவிற்கு உட்படுத்தும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்க உறுதிபூண்டார், மேலும் உலகத் தலைவர்கள் பொதுமக்கள் பகுதிகளில் நடாத்தப்படும் குண்டுவீச்சுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் தமது வார்த்தைகளுக்கு ஈடாக செயற்படவும் வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தில் வேரூன்றிய இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக இணைந்து வாழும் எதிர்காலத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரேமதாச, பலஸ்தீனியர்களின் வாழ்வதற்கான உரிமையை நிலைநிறுத்தி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளையும் வலியுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X