Freelancer / 2024 நவம்பர் 21 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகாவான தமிழ் இளைஞர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விசேட பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.
பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த வடமராட்சியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேற்படி சந்தேக நபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து விசேட அதிரடிப்படையினர், பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு நேற்று பகல் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படந்தன. நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றவர்கள் அத்தனைபேரும் உடல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மேற்படி சந்தேக நபர் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். (a)

1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025