2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது

Freelancer   / 2025 ஜனவரி 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 34 மற்றும் 23 வயதுடையவர்கள்.

அவர்களில் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் அதே பொலிஸாரால் அதே பகுதியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X