2025 ஜனவரி 01, புதன்கிழமை

கொக்கெய்னுடன் கானா நாட்டு பெண் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

142 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து   "கிரீன் சேனல்" ஊடாக வெளியேற முற்பட்ட கானா நாட்டுப் பெண்ணொருவரை,   சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று 29ஆம் திகதி அதிகாலை  கைதுசெய்துள்ளனர். .

அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானாவில் வசிக்கும் 41 வயது பெண் என்றும் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர் என்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை 29 காலை 01.50 மணியளவில் வந்தடைந்தார்.

 அவர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளில் 04 கிலோ 068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர்.

 பின்னர், குறித்த பெண்ணையும் அவர் கொண்டு வந்த போதைப் பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X