2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

ஓய்வு பெற்ற அதிபருடன் இளைஞன் ஓரினச்சேர்க்கை

Editorial   / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

 ஓய்வு பெற்ற 63 வயதான அதிபர் ஒருவருடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட 21 வயதான இளைஞன், அதனை வீடியோவாக எடுத்து அவரிடம் அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபாய் பணம்  கோரியிருந்த நிலையில், அவ்விளைஞன்,   சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.   

இந்த இளைஞன், வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். அங்கு    சிறுமி ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவை அடுத்து, அவ்விளைஞன், கைது செய்யப்பட்டு, குறித்த அதிபர் 2014 ஆ​ம் ஆ ண்டு கடமையாற்றிய  பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு  அனுமதிக்கப்பட்டான்.

இந்த நிலையில் குறித்த சிறுவனுடன் அதிபர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.  அதிபர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார்.  சிறுவனும் இளைஞனாகி, பாடசாலை கல்வியை முடித்து வெளியேறியுள்ளான். எனினும், இருவரும் தொடர்ந்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதனை அவ்விளைஞன் இளைஞன் வீடியோ எடுத்துள்ளான்.

இந்நிலையில், இந்த உறவு தொடர்பில் தான் எடுத்து வைத்திருக்கும் வீடியோவை ​ வெளியிடுவேன் என அச்சுறுத்தி,  9 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு கோரியுள்ளான்.    இளைஞனிடம் பணம் வழங்கியதற்கான கடிதம் ஒன்றை வாங்கி கொண்டு அந்த பணத்தை அதிபர் அவனுக்கு வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இளைஞன்   தனக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் தருமாறும் அல்லது வீடியோவை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளான். இந்நிலையில் 25 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவேன் என தெரிவித்துவிட்டு தனக்கு நேர்ந்த கதி தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரின் ஆலோசனைக்கமைய குறித்த இளைஞனை வெளியிடம் ஒன்றிற்கு அதிபர் வரவழைத்து பணத்தை வழங்கும் போது அங்கு மாறவேடத்தில் இருந்த பொலிஸார் அந்த இளைஞனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

  கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X