Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 8 மாதங்களில் 21 ஓட்டோக்களை திருடியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 ஓட்டோக்களையும், ஓட்டோக்களின் மீதமுள்ள பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரிபத்கொடையில், குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
18 minute ago
23 minute ago