2025 மார்ச் 06, வியாழக்கிழமை

“ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவை”

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, "இலங்கை மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், 34 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கூடுதலாக, இலங்கையின் வயதான மக்கள் தொகை, எதிர்வரும் 2032ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 20.8 ஆகவும், 2037ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொடுக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக ஆரம்ப சுகாதார சேவையில் நாம் மேலும் மேலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும்" என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .