2025 ஜனவரி 24, வெள்ளிக்கிழமை

’ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்கிறது’

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். தில்லைநாதன்) 

எமது மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.

இது எங்களின் நகரம். நாங்கள் வாழும் நகரம். வாழப்போகும் நகரம் என்பதை ஒவ்வொருவரும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய, அவர் 'தூய்மையான இலங்கை' செயற்றிட்டத்தின் கீழ் 'நகரைத் துப்புரவு செய்தல்' வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

'தூய்மையான இலங்கை' செயற்றிட்டம் முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'தூய்மையான இலங்கை' செயற்றிட்டத்தின் கீழ், எதிர்வரும் 03.02.2025 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர், பாடசாலை மாணவர்கள், திணைக்களப் பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம் செய்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், துப்புரவு செய்த மறுநாளே குப்பைகளை அந்த இடங்களில் பொதுமக்கள் கொட்டுவதால் சுத்தம் செய்ததன் நோக்கம் நிறைவடையாத சந்தர்ப்பங்களே அதிகம் எனத் தெரிவித்தார். இம்முறை அவ்வாறான நிலைமை ஏற்படக் கூடாது என ஆளுநர் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X