2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுச் செல்வதற்கு முயன்ற விமானப் பயணி ஒருவர், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால், வியாழக்கிழமை (21)  கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஆவார்.

             அவர் டுபாயிலிருந்து வியாழக்கிழமை (21) காலை 05.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இன் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

              விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது, பொலிஸ்  போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் அவரது பயணப் பையில் இந்த 616 கிராம் தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

  இந்த பயணி  சட்டவிரோதமாக கொண்டு வந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பயணியும் ​ஒப்படைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .