Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 15 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கம்பஹா மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டனர்.
ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பிரசன்னமாகி இருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago