Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியன் நம் நாட்டுக்கு நேராக உச்சம் பெறவுள்ளதால், உங்கள் நிழல் 2025 ஏப்ரல் 5 முதல் 15 வரை சிறிது நேரம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
வானியலாளர் அனுர சி பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயை. ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது.
அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது.
அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்."
"4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago