Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 03 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் அந்த மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரியவந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் (முதல் வாசிப்பு) சமர்ப்பிக்க முடியும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, ஆட்சேபனை தெரிவிக்க இரண்டு வாரங்கள் இருக்கும்.
ஆட்சேபனைகள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரேரணை மீது விவாதம் நடத்தப்படும். ஆட்சேபனைகள் எழுந்தால், அது தொடர்பாக முடிவெடுக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என, ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
0 minute ago
1 minute ago
30 minute ago
34 minute ago