2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

எழுப்பியவர் மீது சுட முயற்சி

Janu   / 2024 ஜூன் 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 23 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு பதிவு செய்வதற்காக, இரண்டு பேர் புதன்கிழமை (19) காலை 5.40 மணியளவில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தி்ற்கு வந்த போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் .

அப்போது கான்ஸ்டபிள் ஒருவர் சென்று தூங்கிக்கொண்டிருந்த அதிகாரியை எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கான்ஸ்டபிளை தகாத வார்த்தையில் திட்டி துப்பாக்கிச் சூட்டு நடாத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது .

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .