2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

எல்பிட்டிய பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்

Editorial   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு-செலவுத் திட்டம்  எவ்வித விவாதமும் இன்றி ஏகமனதாக, திங்கட்கிழமை (30) நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் சனத் சுமனசிறியினால் சமர்ப்பிக்கப்பட்ட    இந்த வரவு- செலவுத் திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நளீன் பிரியதர்ஷனவின் முன்மொழிவுடன் பொதுஜன ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின்  உறுப்பினர் சரத் அல்விஸின் வழிமொழிவுடன்  நிறைவேற்றப்பட்டமை விசேட அம்சமாகும்.

 தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் உட்பட 15 உறுப்பினர்கள்,  பிற கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் அடங்களாக, 26 உறுப்பினர்கள் இந்த விசேட கூட்டத்தில் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X