2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

Freelancer   / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக்  குறைவடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

அத்துடன், தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X