2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

“எரிமலை​ மேல் சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம்”

Editorial   / 2023 நவம்பர் 17 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், கடனை செலுத்தாவிட்டால், அமெரிக்காவின் ஹாமில்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்  குணவர்தன கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .